MY FIRST EVER ROMANTIC KAVITHAI

கார் முகிலில் கார் இருளில்

முழு நிலவோ மோகனமோ,

மொத வரும் முதல் பனியோ!

வண்ண மயில் ஆடுகயில்

காதலி நீ இல்லையெனில்

கண்ணிருந்து என்னவடி? கண்ணே

காதலது கொடுமையடி !



கண்ணன் அவன் காதலித்த

ராதை அவள் வந்தால் கூட

கோதை உந்தன் குழல் மணத்தால்

பொறாமை கொண்டு நானிடுவாள்.

ஆசைகொண்டு நானதை நுகருகயில்

நாட்டம் கொண்டு நெகிழ்வயோ ! இல்ல

நாணி தலை குனிவாயோ?



இறவாத புகழுடய பெருங்குடியில் பிறந்திட்டும்

இறைவனிடம் முறையிட்டேன், உன் இசைவை இறந்திட்டேன்

இன்றில்லை இறுதிவரை என்னுடன் நீ இருந்துவிடு

இவன் போலொரு பாக்கியன் இல்லை என்ற

என் சொத்தாய் நீ இருந்துவிடு.



பொன்னும் பொருளும் இல்லையடி

பதுமை உன்னை கவர்ந்து செல்ல

பல்லக்கு போல நின்றிடுவேன்

பாவை நீயும் வந்துவிடு.

புன்னகை மட்டும் பூத்துவிடு

நம் உறவவுக்கொரு வாழ்வு கொடு.


No comments:

Post a Comment